Thursday, 18 June 2015

இந்தியா–வங்கதேசம் மோதும் ஒரு நாள் போட்டி, டாக்காவில் தொடக்கம்

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மழையால் ‘டிரா’ ஆனது.

இதனை தொடர்ந்து இந்தியா–வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.

டோனி தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் கடைசியாக உலககோப்பை கால்யிறுதியில் மோதின.

டெஸ்ட் போட்டியில் தவான், ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வீராட் கோலி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர்.

மொர்தாசா தலைமையிலான வங்கதேச அணி சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தும் நோக்கில் உள்ளது. துணை கேப்டன் சகீப்–அல்–ஹசன், முஸ்பிகுர் ரகீம், தமிம் இக்பால், நாசிர் உசேன், ரூபெல் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

இந்த ஆட்டம் பகல்–இரவு போட்டியாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

No comments:

Post a Comment